200 தொகுதிகளில் திமுக வெல்லும்: பிரசாரத்தில் மீண்டும் வடிவேலு!
திமுகவுக்காக மீண்டும் பிரசாரக் கூட்டங்களில் வடிவேலு பங்கேற்று பேசியுள்ளார்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, நீண்ட நாள்களுக்கு பிறகு சென்னையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது:
”யார்யார் எந்த மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறார்களோ, அதனைக் கற்றுக் கொள்ளட்டும். யாரையும் காட்டாயப்படுத்த வேண்டாம். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மொழி தமிழ். 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருக்குறளை தமிழில் எழுதி வைத்துள்ளார்.
வலிமையான தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அவரின் வார்த்தைகள் மக்களை நெகிழ வைத்துள்ளது.
வருகின்ற 2026 தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.