திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு கடலில் புனித நீராடிய பக்தர்கள். 
தமிழ்நாடு

ஆங்கிலப் புத்தாண்டு: திருச்செந்தூரில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனை, உள்ளிட்ட பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.

ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் செவ்வாய்கிழமை இரவு முதலே வரிசையில் காத்திருந்து, கோயில் நடைதிறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

புதன்கிழமை அதிகாலை முதல் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ரூ.100 கட்டணம் மற்றும் இலவச பொது தரிசனப்பாதையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.

ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உரைவேந்தரின் உரைமாட்சி

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

SCROLL FOR NEXT