எஸ்.வி.சேகர் 
தமிழ்நாடு

நடிகர் எஸ்.வி. சேகரின் சிறைத்தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்

நடிகர் எஸ்.வி. சேகரின் சிறைத்தண்டனை பற்றி...

DIN

நடிகர் எஸ்.வி. சேகருக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளா்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை எஸ்.வி.சேகா் தனது முகநூல் பக்கத்தில் பகிா்ந்திருந்தாா். இதைத்தொடா்ந்து அவா்மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு பத்திரிகையாளா்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளா் மிதாா் மொய்தின் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகா் எஸ்.வி.சேகா் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை முடிவில் நடிகா் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனையும் ரூ. 15,000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, அபராதத் தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகா் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT