தமிழ்நாடு

தனியார் பள்ளி கழிப்பறைத் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

விளையாட்டின்போது கழிப்பறைத் தொட்டியின் இரும்பு மூடி உடைந்ததால், உள்ளே விழுந்த குழந்தை பலி

DIN

விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் விளையாட்டின்போது கழிப்பறைத் தொட்டியின் இரும்பு மூடி உடைந்ததால், உள்ளே விழுந்த குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த மூன்றரை வயது பெண் குழந்தை லியா லெட்சுமி, வெள்ளிக்கிழமை (ஜன. 3) பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கழிப்பறைத் தொட்டியினுள் விழுந்து உயிரிழந்தார்.

கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து, உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியினர் பள்ளியை முற்றுகையிட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடவும் முயற்சித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கவனக் குறைவாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குழந்தையின் உயிரிழப்புக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமென்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT