முகப்பு
தமிழ்நாடு

உண்டியலில் விழுந்த ஐபோன் திருப்பி வழங்கப்படும்: உறுதியளித்த அமைச்சர் சேகர்பாபு!

கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன் திருப்பி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Updated On : 5 ஜனவரி 2025, 12:25 pm IST
கோப்புப் படம்
பகிர்:

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன் திருப்பி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் கடந்த அக்டோபர் மாதம், அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் வழிபாட்டுக்கு சென்றிருந்தார். இந்த சமயத்தில் உண்டியலில் காணிக்கை செலுத்த முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக கையில் வைத்திருந்த ஐபோனும் உண்டியலினுள் விழுந்தது.

இதனை கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, உண்டியலில் விழும் காணிக்கை அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்று கூறி, மறுத்து விட்டனர். இருப்பினும், இந்து சமய அறநிலையத் துறையிலும் தினேஷ் புகார் அளித்தார்.

Advertisement

Advertisement

உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்ட நாளில்கூட, தினேஷை அழைத்து போனில் உள்ள தரவுகளை வேண்டுமானால் வேறொரு போனில் மாற்றுக் கொள்ளலாம்; ஆனால், செல்போன் தரப்படமாட்டாது என்று திட்டவட்டமாகக் கூறினர்.

உண்டியலில் விழுந்த செல்போனைத் திருப்பித் தருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு, சாத்தியக்கூறுகள் இருந்தால் பக்தருக்கு ஐபோன் திரும்பி நிச்சயமாக வழங்கப்படும்” என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி கூறினார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு ``இந்த ஆட்சி மக்களுக்கு கொடுக்கின்ற ஆட்சி; எடுக்கின்ற ஆட்சியல்ல. ஆகையால், பக்தரின் செல்போன் அவரிடமே ஒப்படைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments