முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு!
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதியப்பட்டது பற்றி...
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பினருக்கும், தவெக வேட்பாளர் அசோக் சினோரா தரப்பினருக்கும் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.
இதில், அசோக் சினோரா மற்றும் வழக்கறிஞர் விஜய்குமாரை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த புகாரின் அடிப்படையில் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை துறைமுகம் தொகுதியில் அசோக் சினோராவை 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் சேகர் பாபு தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
Case Registered Against Former Minister Sekar Babu!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.