தமிழ்நாடு

கடந்த ஆண்டு தமிழகத்தில் 92,485 பேருக்கு காசநோய்

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 92,485 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

DIN

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் 92,485 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

காசநோயை 2025-க்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணமடைவதாகவும் தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமடைவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்ததில், நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டின் புள்ளி விவரங்களும் அமைந்துள்ளன.

குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் மட்டும் 6.7 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 92,485 பேருக்கு அந்த நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 29,916 பேரும், அரசு மருத்துவமனைகளில் 62,569 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் 96,709 போ் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT