திமுகவினர் ஆர்ப்பாட்டம் 
தமிழ்நாடு

ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் நேற்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடந்துகொண்ட விதத்தைக் கண்டித்து இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கழகம் சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உள்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் பாஜக மற்றும் அதிமுகவை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் கலந்துகொண்ட திமுகவினர் ஆளுநரை கண்டித்துக் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் கண்டன உரையாற்றிய நா.கார்த்திக் ஆளுநர் மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை மரபை மீறி உள்ளதாகக் கூறினார். அதுமட்டுமின்றி தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர் தமிழக அரசு கொண்டுவரும் பல்வேறு தீர்மானங்களைக் கிடப்பில் போட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

எனவே ஆளுநரே திரும்பி போ என்ற முழக்கம் இன்று தமிழகம் முழுவதும் ஒலிக்கப்படுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய பொங்கலூர் பழனிச்சாமி, ஆளுநர் தமிழக மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அவர் செயல்பாட்டைச் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். யாரேனும் குற்றம் செய்தால் அவர்களது முதலாளியைத் தான் குற்றம் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் ஆளுநரை நியமித்துள்ள மோடியை தான் குற்றம் சொல்ல வேண்டும் எனச் சாடினார். மோடி தமிழகத்திற்கு செய்யாத கெடுதல்களே கிடையாது எனவும் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய பல்வேறு நிதிகளை வழங்காமல் மோடி மௌன சாமியாராக இருப்பதாக விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT