தமிழ்நாடு

ஆருத்ரா நிதி மோசடி: ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்குகளை விடுவிக்க உத்தரவு

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்குகளை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே. சுரேஷூக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக, ஆர்.கே.சுரேஷூக்கு சொந்தமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

விசாரணையின் போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ஆருத்ரா மோசடி விவகாரத்திற்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்தார்.

மேலும், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளவதாகவும் கூறினார்.

வங்கிக் கணக்கு முடக்கத்தை ரத்து செய்வதற்கு பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம், ஏழு வங்கிக் கணக்குகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என ஏழு லட்சம் ரூபாயை இரண்டு வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்.கே.சுரேஷூக்கு சொந்தமான முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT