தமிழ்நாடு

நடராஜர் கோயில் தெருவடைச்சான் வீதி உலா கோலாகலம்!

மூன்று லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு செய்யப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா.

DIN

சிதம்பரம்: இந்தியாவிலேயே முதன்முறையாக மூன்று லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு செய்யப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

சிவ வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமியை, பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசித்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கடந்த ஜன. 4 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியாக ஜன.12-ம் தேதி தேரோட்டமும், ஜன.13-ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.

ஐந்தாவது நாள் உற்சவ விழாவான தெருவடைச்சான் விழா கோலாகலமாக நடைபெற்றது. காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் சிவ வாத்தியங்கள் முழங்க எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

குறிப்பாக கிழக்கு ரத வீதியில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ருத்ராட்ச பஞ்சமூர்த்தி சுவாமிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று விடிய விடிய சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்த தெருவடைச்சான் திருவிழாவை முன்னிட்டு விசேஷமாக காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு 48 மணி நேரமாக சிவலிங்க வடிவில் ருத்ராட்ச சப்பரம் அமைக்கப்பட்டு பஞ்ச மூர்த்தி வீதி உலா மிகச் சிறப்பாக நான்கு வீதிகள் வழியாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாளங்களுடன் நடனம் ஆடிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT