குடும்பத்துடன் வி. நாராயணன்  படம் |எக்ஸ்
தமிழ்நாடு

கடின உழைப்பால் உயர்ந்த நிலையை அடையலாம்: வி. நாராயணன்

கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம் என இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கவுள்ள வி. நாராயணன் தெரிவித்தார்.

DIN

கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம் என இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கவுள்ள வி. நாராயணன் தெரிவித்தார்.

இஸ்ரோவின் 11-ஆவது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இவர் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) பொறுப்பேற்கவுள்ளார்.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பதியில் வி. நாராயணன், தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரகளுடன் அவர் பேசியதாவது,

இஸ்ரோ தலைவராக மிகவும் முக்கியமான பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வழங்கிய இந்த வாய்ப்பை, நாட்டிற்கு சேவை செய்ய வழங்கப்பட்ட வாய்ப்பாகவே கருதுகிறேன்.

இம்மாதம் ஒரு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. 30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் படைத்த ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விண்ணில் அனுப்பப்பட்டுள்ள இரு செயற்கைக்கோள்களின் தகவல் பரிமாற்றம் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்பட உள்ளது. அதற்காகவும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் இந்த டாக்கிங் தொழில்நுட்பம் பயன்பெறும்.

இந்தியா விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கியபோது அண்டை நாடுகளை நம்பியிருந்தது. தற்போது 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோ ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

எந்தப் பள்ளியில் படித்தாலும் உயரிய பொறுப்புகளை அடைய முடியும். கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT