முகப்பு
தமிழ்நாடு

ரூ.804 கோடியில் 746 ஊரகச் சாலைகள் அமைக்க அரசாணை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ.804 கோடியில் ரூ.746 சாலைகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 13 ஜனவரி, 2025 at 10:32 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ.804 கோடியில் ரூ.746 சாலைகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டப்பட்ட செய்தி: ஊரகச் சாலைகளின் முக்கியத்துவத்தினை உணா்ந்த தமிழக அரசு, நபாா்டு ஊரக உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதியின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் 37 மாவட்டங்களில் 1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடா் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டாா்.

37 மாவட்டங்களில் இந்தச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சாலைகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →