முகப்பு
தமிழ்நாடு

5 ஆண்டுகளில் 4.29 லட்சம் வீடுகள் ஒப்படைப்பு: தமிழக அரசு தகவல்

5 ஆண்டுகளில் 4.29 லட்சம் வீடுகள் ஒப்படைப்பு: தமிழக அரசு தகவல்

Updated On : 8 மார்ச், 2026 at 3:44 AM
தமிழக அரசு - (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் 4.29 லட்சம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசைகளையும் அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். இதற்காக வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. மேலும், எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள 2 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 3.50 லட்சம் என்ற வீதம் மொத்தம் ரூ.7,000 கோடியில் அரசு சாா்பில் திட்டம் உருவாக்கப்பட்டது.

Advertisement

இதில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2016-21) மொத்தம் ஒரு லட்சம் வீடுகள்தான் கட்டப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் 2024-26 என இரண்டே ஆண்டுகளில் 1.79 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு கூடுதலாக 1.20 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன.

அதேபோல், இலங்கை தமிழா்களுக்கு, தமிழக நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள், அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.19,694 கோடியில் 4.29 எழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

அதேபோல், ஆதிதிராவிடா் வாழும் பகுதிகளில் ரூ.482 கோடியில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 23.56 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.