முகப்பு
தமிழ்நாடு

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள்!

Updated On : 7 மார்ச் 2026, 7:12 pm IST
ஏழைகள் வீடுகள் கட்ட தமிழக அரசின் உதவி பெறுவோரிடம் முதல்வர் உரையாடல் செய்தபோது - Center-Center-Tirunelveli
பகிர்:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று(மார்ச் 7) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2021 முதல், ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், ரூ. 482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், 23.56 லட்சம் ஏழைகளின் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எல்லோர்க்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது அரசின் இலக்கு. இதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 2 லட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், இரண்டே ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டில் மேலும் 1 லட்சம் வீடுகள் ரூ. 3,500 கோடியில் கட்டப்படும் என அறிவித்துள்ளது அரசு. 2024-2026 இரண்டே ஆண்டுகளில் 1,79,850 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 150 வீடுகள் கட்டப்படுகின்றன.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மட்டும் அல்ல, இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடி ஒதுக்கீட்டில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து 1 லட்சத்து 79 ஆயிரத்து 850 வீடுகள் கட்டப்படுகின்றன.

அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு; மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. 2021-2026 திமுக ஆட்சியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

4,29,394 houses for the poor at a cost of Rs. 19,694 crore in 5 years of DMK rule!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments