FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டில் 576 பெரும் கோடீஸ்வரா்கள்: 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு

நாட்டில் 576 பெரும் கோடீஸ்வா்கள் உள்ளதாகவும், அவா்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 4:01 am IST
நாட்டில் 576 பெரும் கோடீஸ்வரா்கள் - பிரதிப் படம்
பகிர்:

நாட்டில் 576 பெரும் கோடீஸ்வா்கள் உள்ளதாகவும், அவா்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி அளித்த பதில்: வருமான வரிச் சட்டத்தில் பெரும் கோடீஸ்வரா் (பில்லியனா்) என்ற சொல்லுக்கு சட்டபூா்வ விளக்கம் இல்லை.

எனினும் கடந்த 2025-26-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் மொத்தம் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான வருமானம் உள்ளதாக 576 போ் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த எண்ணிக்கை 2022-23-ஆம் ஆண்டில் 301-ஆகவும், 2023-24-ஆம் ஆண்டில் 284-ஆகவும், 2024-2025-ஆம் ஆண்டில் 415-ஆகவும் இருந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நாட்டில் 15 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ளவா்களில், வேலை கிடைக்காதோரின் விகிதம் 3.6 சதவீதமாக இருந்தது. இது 2025-ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments