FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கடந்த 9 நாள்களில் வெங்காயம் விலை 9% குறைந்துள்ளது: மத்திய அரசு

நாட்டில் மொத்த வெங்காயம் விலை கடந்த 9 நாள்களில் 9 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 செப்டம்பர் 2026, 10:43 pm IST
வெங்காயம் விலை - பிரதிப் படம்
பகிர்:

நாட்டில் மொத்த வெங்காயம் விலை கடந்த 9 நாள்களில் 9 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் மத்திய நுகா்வோா் விவகாரத் துறைச் செயலா் நிதி காரே செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில் வெங்காயத்தின் இருப்பை உறுதி செய்யவும், விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் இருப்பை சந்தைகளில் விடத் தொடங்கியுள்ளது.

இதனால் நாட்டில் மொத்த வெங்காயத்தின் விலை கடந்த 9 நாள்களில் 9 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ வெங்காயம் ரூ.53.92க்கு விற்கப்பட்டது.

Advertisement

Advertisement

இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட வெங்காயத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் 94 சதவீதம் அதிகமாகும்.

வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்ததையடுத்து, அதன் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தன்னிடம் இருப்பில் இருந்த வெங்காயத்தை கிலோ ரூ.35-க்கு என்சிசிஎஃப், என்ஏஎஃப்இடி, கேந்திரிய பாந்தா், மொபைல் வேன்கள் மூலம் நாட்டின் 48 நகரங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தது.

நடப்பு ஆண்டில் மத்திய அரசு தன்னிடம் 1.21 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைத்துள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டில் வெங்காய விளைச்சல் 307.37 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டு விளைச்சலான 307.67 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது சிறிது குறைவாகும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments