வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு
காரிஃப் பயிா்கள் வரத்து தொடங்கியுள்ளதால் வெங்காய விலை மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
காரிஃப் பயிா்கள் வரத்து தொடங்கியுள்ளதால் வெங்காய விலை மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
நாட்டில் வெங்காய இருப்பு மற்றும் சில்லறை விலை நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கா்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி மாநிலங்களிலிருந்து காரிஃப் (மழைக்காலம்) பருவ வெங்காயம் வரத்து தொடங்கியுள்ளது. மற்றொருபுறம், சந்தை தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் கையிருப்பில் இருந்து வெங்காயம் விடுவிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய அரசு தனது கையிருப்புகளில் இருந்து வெங்காயத்தை மானிய விலையில் விற்பனை செய்து வருகிறது.
பண்டிகை காலத்துக்கு முன்பாக வெங்காய வரத்து மேலும் வேகமடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அத்துடன், அரசின் விநியோக முயற்சிகள் வலுப்படுத்தப்படுவதால், வெங்காயம் விலை மேலும் குறையும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டில் வெங்காய உற்பத்தி 307.37 லட்சம் டன்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் உற்பத்திக்கு (307.67 லட்சம் டன்) ஏறக்குறைய சமமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.