FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது குறித்து...

காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வெங்காயம். - கோப்புப்படம்
பகிர்:

வடகிழக்குப் பருவமழையால் வரத்து குறைந்துள்ளதால், சின்ன வெங்காயம் கிலோ ரூ. 160 - ரூ. 180 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ. 80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைந்துள்ளதால், கடந்த வாரம் கிலோ ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது ரூ.160 முதல் ரூ. 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ரூ.190 வரை விற்கப்படுகிறது.

இதேபோல, கடந்த வாரம் கிலோ ரூ. 50-க்கு விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது ரூ. 80 வரை விற்கப்படுகிறது. கடந்த வாரங்களில் கிலோ ரூ. 25-க்கு விற்பனையான தக்காளி, தற்போது ரூ. 35 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வால், சின்ன வெங்காயத்துக்குப் பதிலாக பெரிய வெங்காயத்தைப் பயன்படுத்தவும் மக்கள் தொடங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளது.

இதனால், காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் வரத்து அதிக அளவில் குறைந்துள்ளதால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Due to a decline in supply caused by the northeast monsoon, small onions are being sold for rs. 160–rs. 180 per kilogram, while large onions are priced at up to rs. 80 per kilogram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments