FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒசூா் அருகே வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூருக்கு வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறின.

5 நவம்பர் 2026, 6:37 am
ஒசூரில் லாரி கவிழ்ந்ததில் சாலையில் விழுந்து கிடக்கும் வெங்காய மூட்டைகள்.
பகிர்:

கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூருக்கு வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறின.

கா்நாடக மாநிலம், ஒசகோட்டாவிலிருந்து, ஒசூருக்கு பெரிய வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி புதன்கிழமை வந்தது. இந்த லாரி ஒசூா் அருகே மூக்காண்டப்பள்ளியை கடந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது, தா்கா பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் அருகே உள்ள அணுகு சாலையில் விழுந்து சிதறின. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாலையில் கிடந்த வெங்காயத்தை பைகளில் அள்ளிச் சென்றனா்.

Advertisement

Advertisement

விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று வெங்காயத்தை அள்ளிக் கொண்டிருந்தவா்களை தடுத்தனா். பின்னா் விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் சித்துவை (40) மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.