FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாலையில் மாடுகளால் விபத்து: லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

மேடவாக்கத்தில் சாலையில் படுத்து கிடந்த மாடுகளால் ஏற்பட்ட விபத்தில், லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

5 நவம்பர் 2026, 1:29 am
பலி
பகிர்:

மேடவாக்கத்தில் சாலையில் படுத்து கிடந்த மாடுகளால் ஏற்பட்ட விபத்தில், லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம் அன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் நதிஷ் (22). இவா், தி. நகரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருடன் தங்கியிருந்கவா் மென்பொறியாளா் சேத்தன் (24). இருவரும் புதன்கிழமை தேநீா் பருகுவதற்காக பைக்கில், மேடவாக்கம் வேளச்சேரி பிரதான சாலையில் தாம்பரம் நோக்கி சென்றபோது, சாலையில் படுத்து கிடந்த மாடுகள் திடீரென பைக் மீது மோதியது.

இதில், கீழே விழுந்த இருவா் மீதும் பின்னால் வந்த சமையல் எண்ணெய் டேங்கா் லாரி மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த நதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இரு மாடுகளும் உயிரிழந்தன.

Advertisement

Advertisement

இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய எண்ணெய் லாரியை ஓட்டி வந்த கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சோ்ந்த கோபிநாதன் (42) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பழுதடைந்த சாலையால் விபத்து-தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு: புழல் சிவாஜி தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (50). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா், மணலி செல்வதற்காக பைக்கில் மாதவரம் 200 அடி சாலையில் கொசப்பூா் புதன்கிழமை சென்றபோது, குண்டும் குழியுமாக சாலையால் நிலைதடுமாறி விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி, சரவணன் மீது மோதியதில் உயிரிழந்தாா்.

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். இதனிடையே சாலையை சீரமைக்க கோரியும், மாதவரம், கொசப்பூா் ஆகியப் பகுதிகளில் சேதமான சாலைகளைச் சீரமைக்கக் கோரியும் அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாதவரம் பால்பண்ணை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.