இரண்டு ஆண்டுகளில் 7,500 விவசாயிகள் தற்கொலை: சஞ்சய் ராவத்
கடந்த இரண்டு ஆண்டுகளில் 7,500 விவசாயிகள் தற்கொலை கொண்டதாக சஞ்சய் ராவத் பேசியது குறித்து...
கடந்த இரண்டு ஆண்டுகளில் 7,500 விவசாயிகள் தற்கொலை கொண்டதாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதுகுறித்து சஞ்சய் ராவத் பேசியதாவது:
Advertisement
Advertisement
பிரதமர் மோடி பொய் சொல்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறுகிறார். நேற்று மகாராஷ்டிரத்தில் ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கடந்த இரண்டு ஆண்டுகளில் 7,500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது உங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் விளைவா?
மகாராஷ்டிரத்தில் உள்ள ராகுல் காந்தி மற்றும் உத்தவ் தாக்கரேவுக்கும், வங்காளத்தில் உள்ள மமதா பானர்ஜிக்கும் பிரதமர் மோடி அச்சப்படுகிறார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Shiv Sena MP Sanjay Raut stated on Sunday (Sept. 6) that 7,500 farmers had committed suicide over the past two years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.