பொள்ளாச்சியில் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன் பாலக்காட்டில் தரையிறங்கியது!
பொள்ளாச்சி சர்வதேச பலூன் விழாவில் நேற்று பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன், கேரள மாநிலம் பாலக்காட்டில் தரையிறங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலக்காடு மாவட்டம் பத்தான்சேரி பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் தரையிறங்கிய பலூனில் இருந்து 3 பேர் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் இரண்டு பைலட்களும் இருந்துள்ளனர். இந்த பலூன் 20 கிலோ மீட்டர் தொலைவு பிறந்த பிறகு, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தானாகப் பறக்கத் தொடங்கியது.
பொள்ளாச்சியில் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன் பல கிலோ மீட்டர் பயணித்து கேரளத்தில் தரையிறங்கியிருக்கிறது. போதிய எரிபொருள் இல்லாததால் பலூன் தரையிறங்கியதாக விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற சேவல்!
பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவில் பறக்கவிடப்பட்ட பலூன் கட்டுப்பாட்டை இழந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த பலூன் கேரளத்தில் தரையிறங்கியிருக்கிறது. அதில் இருந்தவர்கள் பத்திரமாக பொள்ளாச்சி அழைத்து வரப்பட்டனர்.
பொள்ளாச்சியில் 10வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று பலூன்களைப் பறக்க விடுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.