சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம்
தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

பரிசு தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று மறுப்பு

DIN

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 ரொக்கமும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்குரைஞர் பொதுநல மனு அளித்திருந்தார்.

மனுவில் அவர் தெரிவித்ததாவது, பெரும் மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வாழ்வாதாரம், பொருளாதாரம், உடைமைகளையும் இழந்து, சோகத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட, ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக ரூ. 2000 வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாவது, பொங்கல் திருநாளுக்கு பரிசு தொகுப்புடன் மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்கினால், மகிழ்ச்சிதான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு, ரொக்கப் பணம் ரூ. 2000 வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்றுகூறி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர்.

தமிழக அரசின் நிதி நிலைமையில் நெருக்கடி என்று கூறிய அரசு, இந்தாண்டில் பொங்கல் திருநாளில் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க முடியவில்லை என்று கூறியது. இருப்பினும், பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT