தமிழ்நாடு

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தங்கம் விலையின் இன்றைய நிலவரம்..

DIN

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது என்ற நிலையில், தொடர்ந்து உயர்விலேயே இருந்த தங்கம் விலை 4-வது நாளாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றுமுன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.58,720-க்கு விற்பனையாகி வந்த நிலையில், நேற்று மீண்டும் ரூ.59 ஆயிரத்தை எட்டியது.

போர் நிறுத்தம் போன்ற காரணங்களால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலையிலேயே கிராமுக்கு ரூ.80 அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியளித்தது.

ஜனவரி முதல் வாரத்தில் 57 ஆயிரம் ரூபாயில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்துவந்தது. தங்கம் விலை இன்னும் ஓரிரு நாள்களில் ரூ.60 ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கு விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது: அகமதாபாத் விமான நிலைய நிர்வாகம்

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 27% சரிவு!

வடகிழக்குப் பருவமழை: நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இம்மாதமே பெறலாம்!

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களை அறிவித்தார் நிதீஷ் குமார்!

SCROLL FOR NEXT