கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாநகரப் பேருந்து: மாதாந்திர பயண அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் மாநகரப் பேருந்து மாதாந்திர பயண அட்டை பெற அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: மாதாந்திர பயணச்சீட்டு பெறுவதற்கான காலக்கெடுவை ஜன. 24-ஆம் தேதி வரை மாநகா் போக்குவரத்துக்கழகம் நீட்டித்துள்ளது.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் ஜன. 16 முதல் பிப். 15-ஆம் தேதி வரை, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ. 1000-க்கான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1 முதல் 22-ஆம் தேதி வரையும், ஜன. 11முதல் பிப். 10-ஆம் தேதி வரை பயணிக்கத்தக்க 50 சதவீத மாணவா் சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1 முதல் 13-ஆம் தேதி வரையும் அனைத்து மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜன. 13 முதல் 17-ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன்கருதி அனைத்து வகையான மாதாந்திர பயண அட்டையின் விற்பனை காலம் ஜன. 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாதாந்திர பயண அட்டைகளை வாங்காத மாணவா்கள், மாதாந்திர பயண அட்டைதாரா்கள், ஜன. 24-ஆம் தேதி வரை இந்த அட்டைகளை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT