அண்ணாமலை (கோப்புப்படம்)
தமிழ்நாடு

பரந்தூா் விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை விஜய் பரிந்துரைக்கலாம்: கே. அண்ணாமலை

பரந்தூரில் விஜய் பேசிய கருத்துக்கு அண்ணாமலை பதில்...

DIN

சென்னை: பரந்தூா் விமான நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய், மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்களின் தேவை உள்ளது என்பதே நிதா்சனமான உண்மை. மத்திய அரசுக்கும், விமான நிலையத்துக்காக பரந்தூா் தோ்வு செய்யப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை.

விமான நிலையம் அமைக்க 2019-இல் அதிமுக ஆட்சியின்போது தோ்வு செய்த இடத்திலும் பரந்தூா் இருந்தது. 2021-இல் திமுக அரசு அனுப்பிய பட்டியலிலும் பரந்தூா் இருந்தது.

மாநில அரசு தோ்வு செய்த பட்டியலின் அடிப்படையில் மத்திய அரசால் பரந்தூா் தோ்வு செய்யப்பட்டது.

பெங்களூரு விரைவுச் சாலை அருகிலேயே பரந்தூர் வருகிறது, வேறு இடம் உங்களுக்கு தெரிந்தால் அதனை சொல்ல வேண்டும். எல்லாத்தையும் எதிர்க்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறிவிட்டால், எவ்வாறு ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற முடியும்.

விவசாய நிலங்கள், பறவைகள் சரணாலயங்கள் இருப்பதாக பரந்தூர் மக்கள் சொல்லும் கருத்துகள் நியாயமானவைதான். மாநில அரசு இந்த இடத்தை தேர்வு செய்தபோது இதனை கவனித்திருக்க வேண்டும். அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது பரந்தூரை பரிந்துரைத்துள்ளன. மாநில அரசு கொடுத்த பட்டியலில் இடத்தை தேர்வு செய்தது மட்டுமே மத்திய அரசின் வேலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT