காணும் பொங்கலையொட்டி, சென்னை பெசன்ட் நகா் எலியிட்ஸ் கடற்கரையில் வியாழக்கிழமை திரண்ட மக்கள்.  
தமிழ்நாடு

காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமை தீர்ப்பாயம்

மெரீனா கடற்கரை குப்பைக் கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம் என்று பசுமை தீர்ப்பாயம் குற்றச்சாட்டு...

DIN

காணும் பொங்கல் அன்று அரசு விடுமுறை அளிப்பதை ரத்து செய்ய பரிந்துரைப்போம் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மக்கள் காணும் பொங்கலன்று (ஜன. 16) மெரீனா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

இந்த கொண்டாட்டத்தின்போது, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை கடற்கரைகளிலேயே மக்கள் போட்டுச் சென்றதால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டது. பல நூறு டன் குப்பைகளை அகற்றப்பட்டது.

இந்த நிலையில், மெரீனா கடற்கரை குப்பைக் கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மேலும், காணும் பொங்கலன்று விடுமுறை அளிப்பதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம் என்று பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT