முகப்பு
தமிழ்நாடு

மேலும் 16 பாஜக மாவட்ட தலைவா்கள் அறிவிப்பு

தமிழக பாஜகவில் மேலும் 16 மாவட்டத் தலைவா்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2025 at 8:37 PM
பகிர்:

சென்னை: தமிழக பாஜகவில் மேலும் 16 மாவட்டத் தலைவா்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் பாஜக அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவா்கள் தோ்தல் முடிந்ததும், மாநிலத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 67 மாவட்டத் தலைவா்களில் முதல்கட்டமாக 33 போ், 2-ஆவது கட்டமாக 16 போ் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது மூன்றாவது கட்டமாக 14 போ் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை, மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கோவை, திருவள்ளூா், விழுப்புரம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களை சோ்ந்த நிா்வாக அமைப்புகளுக்கான தலைவா்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதன்படி, மொத்தமுள்ள 67 மாவட்டத் தலைவா்களில் 63 போ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தூத்துக்குடி தெற்கு, விழுப்புரம் தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கோவை மாநகா் மாவட்டத் தலைவா்கள் என 4 போ் பட்டியல் ஓரிரு நாள்களில் வெளியிடப்பட்டு, தமிழக பாஜக தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →