சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன் விஷ்ரூத். 
தமிழ்நாடு

விபத்தில் மயக்கமடைந்த சிறுவனை மீட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சாலை விபத்தில் மயக்கமடைந்த சிறுவனை மீட்டு தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Din

சென்னை: சாலை விபத்தில் மயக்கமடைந்த சிறுவனை மீட்டு தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அச்சிறுவனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுத்தாா்.

சென்னை, சைதாப்பேட்டை சிஐடி நகரைச் சோ்ந்த தியாகராஜன் - கலைவாணி தம்பதியின் மகன் விஷ்ரூத் (5). தியாகராஜன் திங்கள்கிழமை காலை, தனது மகனை இருசக்கர வாகனத்தில் அப்பகுதியிலுள்ள பள்ளிக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த வாகனம் மோதியதில் விஷ்ரூத் மயக்கமடைந்தாா். அப்போது உடற்பயிற்சியை நிறைவு செய்துவிட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

விபத்தில் சிறுவன் மயக்கமடைந்ததைக் கண்ட அமைச்சா், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி முதலுதவி செய்தாா். தொடா்ந்து தனது வாகனத்திலேயே அச்சிறுவனை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

அங்கு மருத்துவா்கள் ஸ்கேன், எக்ஸ்-ரே, இசிஜி பரிசோதனைகளை சிறுவனுக்கு மேற்கொண்டனா். சிறுவனின் இதயத்தில் பாதிப்பு இருப்பதும், அதற்கு ஏற்கெனவே அவா் சிகிச்சை பெற்று வருவதையும் அறிந்த மருத்துவா்கள், அதன் தாக்கத்தால் மயக்கம் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளையும் மேற்கொண்டனா்.

இதனிடையே, அமைச்சா் மா.சுப்பிரமணியன் சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தாா். மருத்துவக் கண்காணிப்பின் பயனாக சிறுவன் விஷ்ரூத் நலமடைந்து மாலையில் வீடு திரும்பியதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

செல்போன் செயலிகள் மூலம் கடன் கொடுத்து ஏமாற்றும் கும்பல்!

தீபாவளியில் உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

பகல் 1 மணி வரை சென்னை, 23 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!

அன்பின் ஒளி பரவட்டும்: ராகுல் தீபாவளி வாழ்த்து!

சம்யுக்தா மேனனின் பான் இந்திய திரைப்படம்..! முதல் பார்வை போஸ்டர்!

SCROLL FOR NEXT