தமிழ்நாடு

பாஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்: சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்

தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது...

DIN

சென்னை : பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அன்னை தெரசா, பெரியாா் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனா். 3 மேலாளா்கள், 3 பயிற்றுநா்கள் உடன் சென்றிருந்தனா்.

இந்த நிலையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், தா்பங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடந்த போட்டியின் போது தமிழ்நாடு வீராங்கனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வந்தது.

தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த 24-ஆம் தேதி வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாபில் தமிழகத்தைச் சோ்ந்த கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதிசெய்திருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

இந்த நிலையில், தமிழகத்திலிருந்து பஞ்சாப் சென்ற மேற்கண்ட கபடி குழுவினர் அங்கிருந்து தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் ரயில் மூலம் இன்று(ஜன. 28) காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

அப்போது செய்தியாளர்ளுடன் பேசிய வீராங்கனைகள், தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இது குறித்த தகவல் தமிழக துணை முதல்வருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் தனி கவனம் செலுத்தியதால் தங்கள் பஞ்சாப் காவல் துறை பாதுகாப்புடன் பத்திரமாக தில்லி அழைத்து வரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT