தமிழ்நாடு

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! - போக்குவரத்துத் துறை

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

DIN

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 50, அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ. 18 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் இரவு நேரங்களில் பயணித்தால் பகல் நேரத்தைவிட கூடுதலாக 50% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பிப். 1 முதல் இது அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

'ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது.

ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்த முடியாது. ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்களுக்கு வழங்கப்படும்

புகாரின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! மக்கள் மலர் தூவி பிரியாவிடை!

கல்கி - 2: தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை?

நோயெதிர்ப்பு சக்தி! ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

பார்சிலோனா அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான 8 அணிகள்!

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

SCROLL FOR NEXT