முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின்

வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு

DIN

சென்னை: வட சென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

வடசென்னையில் நிறைவேற்றப்படும் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருக்கு திட்டப் பணிகளின் நிலை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராகத்தான் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும். பெரியாரை மரியாதைக் குறைவாக பேசுபவர்களுக்கு நாங்கள் மரியாதை கொடுக்க விரும்பவில்லை. பெரியார் எங்களுக்கு தலைவருக்கு எல்லாம் தலைவர். பெரியாரை விமர்சிப்பவர்களை எல்லாம் நாங்கள் பொருட்படுத்த விரும்பவில்லை.

வட சென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் துணை முதல்வரும் அமைச்சர்களும் ஆய்வு செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கு தொடர்பாக வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் சில சம்பவங்களை பெரிதுப்படுத்துகின்றனர். சட்டம் ஒழுங்கு இங்கு சிறப்பாக இருப்பதால்தான் வெளிநாட்டு முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன என்றார் முதல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT