தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா (கோப்புப் படம்) X | Dr. T R B Rajaa
தமிழ்நாடு

சாதிக்கும் தமிழ்நாடு: புகழும் மத்திய அரசு!

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்து வருவதாக டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பதிவு

DIN

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்து வருவதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் கூறியுள்ளது. தொடர்ந்து, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் தமிழ்நாடு இருப்பதாகவும் கூறியது.

நாட்டின் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் 38 சதவிகிதத்தையும், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் சுமார் 47 சதவிகிதத்தையும் தமிழ்நாடு வழங்குவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், காலணி தொழிற்சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறுகிறது. இந்த ஆய்வறிக்கை குறித்து தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடை ஏற்படுத்துறவங்களுக்கு பயம் வரணும் - M.K. Stalin | கல்வியில் சிறந்த தமிழ்நாடு

அடுத்த கல்வி ஆண்டுமுதல் தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்! - Revanth Reddy

இரவின் மடியில்... மேகா சுக்லா!

பாலைவன ஸ்னோபெர்ரி... ஸ்ரேயா!

எங்க அப்பா ஒரு வேளை சாப்பிட்டு போய் படிச்சதால நான் 3 வேளை சாப்பிட்டு ஸ்கூல் போனேன் - Sivakarthikeyan

SCROLL FOR NEXT