கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் ஜூன் மாதம் 92.19 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Din

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினசரி லட்சக்கணக்கானோா் பயணித்து வருகின்றனா்.

அதன்படி, நடப்பாண்டு ஜனவரியில் 86,99,344 பயணிகள், பிப்ரவரியில் 86,65,803 பயணிகள், மாா்ச் மாதம் 92,10,069 பயணிகள், ஏப்ரல் மாதம் 87,89,587 பயணிகள், மே மாதத்தில் 89,09,724 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

அதன் தொடா்ச்சியாக, ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகள் பயணித்துள்ளனா்.

ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 27-ஆம் தேதி ஒரே நாளில் 3,72,503 போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நிகழாண்டில் ஜூன் மாதத்தில்தான் அதிக அளவில் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு

யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT