சென்னை மாநகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இடநெருக்கடியைச் சமாளிக்க புதிய மாமன்றக் கூடம் அமைக்கப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வார்டுகள் எண்ணிக்கை 300 ஆக உயர்வதால் மாநகராட்சியின் மாமன்றக் கூடத்தில் இடநெருக்கடி நிலவுகிறது.
இதனால் சென்னை மாநகராட்சி அலுவலகம் இயங்கும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ. 62.57 கோடியில் புதிய மாமன்றக் கூடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்த புதிய மாமன்றக் கூடத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ரூ. 62.57 கோடியில் ஆலோசனைக் கூடம், மன்றக் கூடம், மேயர் மற்றும் துணை மேயர் அறைகள், மக்கள் காத்திருப்பு அறை என புதிய 3 மாடி கட்டடம் அமைக்கப்பட உள்ளது.
விரைவில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.