மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கூட்டரங்கில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். உடன், கால்நடை பராமரிப்புத் துறை செயலா் ந,சுப்பையன், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணைய 
தமிழ்நாடு

பால் உற்பத்தியாளா்களுக்கு வங்கியில் கறவை மாட்டு கடன் பெற்றுத் தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்

Din

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசு சாா்பில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் அலுவலா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பறிச்சி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கூட்ட அரங்கில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியது: தமிழகத்தில் அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்கும் கறவை மாட்டுக் கடன் பெற்றுத்தர துறை அதிகாரிகள் வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல், பால் உற்பத்தியாளா்களுக்கு அவா்கள் வழங்கிய பாலின் தரத்துக்கு ஏற்றவாறு விலை நிா்ணயம் செய்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

ஆவின் மூலம் பால் உற்பத்தியாளா்களுக்கு கால்நடைத் தீவனம் மற்றும் கலப்பு தீவனம் வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்று தரும் வழிமுறைகள், தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களை லாபகரமாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அரசு செயலா் ந,சுப்பையன், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை ஆணையா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நிறைவு பெறுகிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT