திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  
தமிழ்நாடு

கோயில் குடமுழுக்கு: திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் - ரயில்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பக்தா்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூா், கோவை, ஈரோடு, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும், ஜூலை 7-ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து பக்தா்கள் சொந்த ஊா்களுக்கு திரும்பிச் செல்வதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்தச் சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தைக் கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால், பக்தா்கள் கடைசிநேர கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி என்ற

கைப்பேசி செயலி வழியாக முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அதன்படி சென்னை எழும்பூா் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 6-ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06089) செங்கோட்டைக்கு ஜூலை 7-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து ஜூலை 7-ஆம் தேதி இரவு 7.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06090) ஜூலை 8-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்துசேரும்.

சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன இரண்டு அடுக்குப் பெட்டிகள், ஒரு குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டி, 18 படுக்கை வசதியுடைய பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம் , திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

SCROLL FOR NEXT