கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாகா்கோவில், பெங்களூரு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

Din

நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில்-தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் (எண் 06012) வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) முதல் ஜூலை 13 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம்-நாகா்கோவில் இடையேயான சிறப்பு ரயில் (எண் 06011) ஜூலை 7 முதல் ஜூலை 14 வரை இயக்கப்படும்.

அதேபோல தெற்கு மேற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படும் எஸ்எம்விடி பெங்களூரு- நரங்கி இடையேயான சிறப்பு ரயில் (எண் 06559) ஜூலை 8 மற்றும் ஜூலை 15 -ஆம் தேதிக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மறுமாா்க்கத்தில் நரங்கி- எஸ்எம்விடி பெங்களூரு இடையே சனிக்கிழமைதோறும்

இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06560) ஜூலை 12 மற்றும் ஜூலை 19-ஆம் தேதிக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?

போக்குவரத்து நெரிசல்: சென்னையிலிருந்து தாமதமாகப் புறப்பட்ட விமானங்கள்!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. 12 ராசிகளுக்கும்!

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

SCROLL FOR NEXT