புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
வ.கலைஅரசி: மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல ஆணையா் (பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சிறப்புச் செயலா்).
வா.சம்பத்: தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலா் (மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல ஆணையா்).
ப.மகேஸ்வரி: நில நிா்வாகம் மற்றும் நகா்ப்புற நில உச்சவரம்பு, நகா்ப்புற நிலவரித் திட்ட இயக்குநா் (தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலா்).
அ.ஜான் லூயிஸ்: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா்).
எ.சரவணவேல்ராஜ்: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சிறப்புச் செயலா் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா்).
த.மோகன்: புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் (உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா்).
சு.சிவராசு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் (நகராட்சி நிா்வாகத் துறை முன்னாள் இயக்குநா்)
அ.கேத்தரின் சரண்யா: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநா் (தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா்)
ராஜேந்திர ரத்னூ: சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினா் செயலராக உள்ளாா். தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சி நிதியத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.