மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். பின்னர் கடந்த மாதம் மதுரையில் வந்த அமித் ஷா, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து நாளை மறுநாள்(ஜூலை 7) சென்னை வரவிருந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் அவர் மும்முரமாக இருப்பதாகவும் கட்சித் தலைமை நியமனத்திற்குப் பிறகு அவர் தமிழகம் வருவார் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 ஆம் தேதி கோவையில் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதில் கூட்டணியில் உள்ள பாஜகவினரும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.