தமிழக அரசு file photo
தமிழ்நாடு

முதியோா், பெண்கள் இல்லங்கள் பதிவு: தமிழக அரசு அறிவுறுத்தல்

Din

முதியோா், பெண்களுக்கான இல்லங்களைப் பதிவு செய்வதுடன், உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் விடுதிகள்-இல்லங்கள், முதியோா் இல்லங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதற்கென தமிழ்நாடு இணைய சேவை முகப்பில் ஒரு பிரத்யேக சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவை வழியாக, முதியோா் இல்லங்களைப் பதிவு செய்வதுடன், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமங்களுக்கு விண்ணப்பித்து அவற்றைப் பெறலாம். அத்துடன் பணிபுரியும் மகளிா் விடுதிக்கான உரிமம் அதன் வழியே வழங்கப்படும்.

சமூக நலத் துறையின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள், தங்களுடைய உரிமங்கள் காலாவதியாகும்போது புதிய இணையதள நடைமுறையைப் பயன்படுத்தி உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெய்வ தரிசனம்... வளமான வாழ்வு தரும் கீழ்வேளூர் கேடிலியப்பர்!

2-ம் நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

81 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?

கோவையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

SCROLL FOR NEXT