முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்! கோவை நிகழ்ச்சி நிரல்!

தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Updated On : 6 ஜூலை, 2025 at 7:44 AM
கோப்புப் படம்
பகிர்:

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்படி, கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.

கோவையில்ம் காலை 9 மணியளவில் மேட்டுப்பாளையம் தொகுதி தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 10.30 மணியளவில் விவசாயிகளைச் சந்தித்து பேசவுள்ளார்.

அடுத்ததாக, பிளாக் தண்டர் செல்லும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4.35 மணியளவில் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை காந்தி சிலை வரையில் ரோடு ஷோவும் செல்கிறார்.

இறுதியாக, மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய சந்திப்புக்கு அவர் செல்கிறார். மேற்குறிப்பிட்ட 5 இடங்களிலும் மக்களைச் சந்தித்து, பிரசார வாகனத்தில் இருந்தவாறே எடப்பாடி பழனிசாமி உரையாற்றவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →