மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணத்தில் நயினார் நாகேந்திரன் படம் - அதிமுக / யூடியூப்
தமிழ்நாடு

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தின் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தின் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின் இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி வாகன பவனி மேற்கொண்டார். இதில் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் உள்ளிட்டோர் வாகனத்தில் இருந்தனர்.

அப்போது சுற்றுப்பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து நயினார் நாகேந்திரன் பேசினார்.

உரையின் தொடக்கத்தில் வாகனத்தில் இருந்தவர்கள், தொண்டர்கள் என பலரையும் குறிப்பிட்டு உரையைத் தொடங்கினார். அப்போது, நாளைய முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற இயக்கத்தில் அனைவரும் இணைந்திருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா உடன் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52% உயர்வு: இபிஎஸ்

BJP state president Nainar Nagendin has referred to Edappadi Palaniswami as the future Chief Minister of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொரசாமி

தமிழா... நீ முன்னோடி!

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

ஐந்தாவது சுதந்திரம்

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT