தமிழ்நாடு

ராத்திரி சிவராத்திரி... வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு!

நடிகை வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர் படத்தில், தனது பாடலை அனுமதியின்றி வைத்ததாக இளையராஜா வழக்கு

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலை வைத்ததாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில், தானே முன்னணி பாத்திரத்திலும் நடித்த மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மற்றும் செஃப் தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், ஷகீலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வனிதாவின் மகள் ஜோவிகாவே படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், மிஸஸ் & மிஸ்டர் படத்தில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி வைத்திருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த `ராத்திரி சிவராத்திரி’ பாடலை, வனிதா விஜயகுமாரின் படத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல் கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து, மிஸஸ் & மிஸ்டர் படத்தில் இருந்து ராத்திரி சிவராத்திரி பாடலை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடாக இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை திங்கள்கிழமையில் (ஜூலை 14) விசாரிக்கப்படும் என்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு கூறியது.

இதையும் படிக்க: இணையத்தைக் கலக்கும் விளம்பரம்! ரூ.65 லட்சம் சம்பளத்தில் விவசாயிகளுக்கு வேலை!

Ilayaraja moves Chennai HC against Vanitha Vijayakumar's film Mrs & Mr

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT