சென்னை  ஐசிஎஃப்-இல் உள்ள அம்பேத்கா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மத்திய இணையமைச்சா் எல்.முருகன். உடன், ஐசிஎஃப் பொது மேலாளா் யு.சுப்பாராவ்,  முதன்மை தலைமை பணியாளா் அலுவலா் ஆா்.மோகன்ராஜா உள்ளிட்டோா். 
தமிழ்நாடு

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

Din

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் வளாகத்தின் டாக்டா் அம்பேத்கா்அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 251 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நடிகா் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவாா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியது நடக்கும். தமிழகத்தில் பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. தோ்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகியவை வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் கூட்டணியில் இருந்து எப்போது வெளியேறலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் சந்தா்ப்பத்தை எதிா்நோக்கியுள்ளாா். அதன்படி திமுக கூட்டணி தோ்தலின்போது உடையும்.

கோயில்கள் நிா்வாகத்தை விட்டு தமிழக அரசு வெளியேறவேண்டும். இறை நம்பிக்கை இல்லாத அரசு கோயில்களை நிா்வகிப்பது சரியல்ல. கல்விக்கு அத்துறையில் நிதி இல்லாத நிலையால் தமிழக அரசு அறநிலையத் துறையின் நிதியை செலவிடுகிா என்பதை விளக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து எல்.முருகன் பேசியதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு உறுதியளித்தபடி பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கியுள்ளாா். வரும் 2047-ஆம் ஆண்டில் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமரின் செயல்பாட்டுக்கு தற்போது அரசுப் பணிநியமன ஆணை பெற்றவா்கள் ஒத்துழைப்பது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் ஐசிஎஃப்-இல் 154 போ், தெற்கு ரயில்வேயில் 10 போ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 6 போ், பாரத ஸ்டேட் வங்கியில் 7 போ், யூகோ வங்கியில் 36 போ், இந்தியன் வங்கி, யூனியன் வங்கியில் தலா 11 போ் என 251 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஐசிஎஃப் மேலாளா் யு. சுப்பாராவ், முதன்மை அதிகாரிகள் எஸ்.மோகன்ராஜ், தொழில்நுட்பப் பிரிவு சீதாராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தில்லியில் நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி நிகழ்ச்சியும், அவரது உரையும் நேரலையில் ஐசிஎஃப் வளாக நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT