தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக, பாமகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, சிறிய கட்சிகளை எல்லாம் ஓரணியில் இணைக்க முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக 'பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை' என்று தவெக தலைமை கூறியுள்ளது.
'பாஜகவுடன் 100% அல்ல, 1000% கூட்டணி இல்லை என்பது உறுதி, அமித் ஷாவின் பதில் மற்ற கட்சிகளுக்கே பொருந்தும், எங்களுக்கு அல்ல' என்று தவெக தலைமை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பதிலளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்றும் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே ஆட்சியில் பங்கு இல்லை என்று அதிமுக கூறி வரும் நிலையில், அமைச்சர் அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா பேட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.