கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை.

இந்த நிலையில், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீண்டும் தமிழக(ராமேஸ்வரம்) மீனவர்கள் 7 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

7 TN Fishermen arrested by SriLankan Navy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

SCROLL FOR NEXT