தமிழ்நாடு

டேங்கர் ரயில் தீவிபத்து! முழுவதுமாக அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தீவிபத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் பற்றியெரிந்த தீவிபத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், டீசல் என்ஜின் தடம் புரண்டு விபத்துள்ளானது.

கச்சா எண்ணெய் டேங்கரில் உராய்வு ஏற்பட்டதில் தீப்பற்றி எரிந்து, அடுத்தடுத்து 7 டேங்கர் பெட்டிகளில் மளமளவென பரவியது. இந்த தீவிபத்தால் ஏற்பட்ட புகையானது, விண்ணை முட்டும் அளவுக்கு மேலெழும்பியது.

மேலும், 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. அவை மொத்தமாக ரூ. 12 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், மொத்தமாக தீயோடு தீயாய் போனது.

இருப்பினும், இந்த தீவிபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறை உள்பட தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து தொடர் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சுமார் 7 மணிநேரப் போராட்டத்தின் பலனாக, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. 70 சதவிகித தீ அணைக்கப்பட்டபோதே, பகல் 1 மணியளவில் தீ முழுதும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கணித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT