FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டேங்கர் ரயில் தீவிபத்து! பகல் 1 மணிக்குள் கட்டுக்குள் வரலாம்!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தீவிபத்து மதியத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்:

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தீவிபத்து மதியத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், டீசல் என்ஜின் தடம் புரண்டு விபத்துள்ளானது.

கச்சா எண்ணெய் டேங்கரில் உராய்வு ஏற்பட்டதில் தீப்பற்றி எரிந்து, அடுத்தடுத்து 7 டேங்கர் பெட்டிகளில் மளமளவென பரவியது. இந்த தீவிபத்தால் ஏற்பட்ட புகையானது, விண்ணை முட்டும் அளவுக்கு மேலெழும்பியது.

Advertisement

Advertisement

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறை உள்பட தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், 70 சதவிகித தீ அணைக்கப்பட்டதாகவும், நண்பகல் 1 மணியளவில் முழுதும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தால், சென்னையில் விரைவு மற்றும் புறநகர்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சென்னை வரும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments