கோப்புப் படம்  
தமிழ்நாடு

தமிழகத்தில் 33 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் 33 காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலம் முழுவதும் 33 காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆர். சிவபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

மஹேந்தர் குமார் ரத்தோட் ஐபிஎஸ், காவல் துறை தலைமையக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் காவல் கண்காணிப்பாளராக எஸ். விமலா, வேலூர் காவல் கண்காணிப்பாளராக ஏ. மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் காவல் கண்காணிப்பாளராக விஸ்வேஸ் பாலசுப்பிரமணியமும், தேனி கண்காணிப்பாளராக ஸ்நேக பிரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாநகர் துணை ஆணையராக ஆர். உதயகுமார், தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக டி. குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொளத்தூர் துணை ஆணையராக பி.குமார், மத்திய சென்னை காவல் கண்காணிப்பாளராக கனகேஸ்வரி, கோவை தெற்கு துணை ஆணையராக ஜி. கார்த்திகேயன், மதுரை சிவில் சப்ளை எஸ்.பி.யாக ஸ்ரீனிவாச பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் டிஐஜி என். தேவராணி, காஞ்சிபுரம் சரக காவல் துறை துணைத் தலைவராகவும், சென்னை மாநகர உளவுத் துறை இணை ஆணையர் ஜி. தர்மராஜன், வேலூர் சரக டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்பேடு துணை ஆணையராக இருந்த அதிவீரபாண்டியன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க | பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!

The government has ordered the transfer of 33 police officers across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் கனட வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

புதுப்பூங் கொன்றை... பாயல் ராதாகிருஷ்ணா!

ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிப்பு: இஸ்ரேல் ராணுவம்

பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

தீபாவளி பார்ட்டி... சாயிஷா!

SCROLL FOR NEXT